குவைத்தில் நாளை முதல் ஞாயிறுக்கிழமை வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலையாளர் அறிவிப்பு;சவுதி, ஈராக் ஆகிய நாடுகளிலும் வானிலை ஒரே மாதிரியான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Image : முஹம்மது கரம்
குவைத்தில் நாளை முதல் ஞாயிறுக்கிழமை வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலையாளர் அறிவிப்பு
குவைத் வானிலை ஆய்வாளர் முஹம்மது கரம் அவர்களை மேற்கோள் இன்று(03/02/21) புதன்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையில், நாட்டில் வியாழக்கிழமை முதல் மிதமான மழை மற்றும் சில நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடரும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார் என்பதை தினசரி சற்றுமுன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மத்திய அரேபியாவின் மையப்பகுதியில் ஏற்படும் தாழ்வழுத்த காலநிலையே மழைப்பொழிவு காரணம் என்றும் கரம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளை முதல் நாட்டில் பகல் நேரங்களில் மேக மூட்டங்கள் ஏற்படும் எனவும்,தொடர்ந்து நாட்டிலு மழைப்பொழிவு ஏற்படும் எனவும், இது ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மத்திய அரேபியாவின் மையப்பகுதியில் ஏற்படும் இந்த வானிலை மாற்றம் காரணமாக குவைத்,சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலும் வானிலை ஞாயிறுக்கிழமை வரை ஒரே மாதிரியான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.