குவைத்தில் பிப்ரவரி-21 முதல் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை சிவில் விமான இயக்குனரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது அதன் விரிவான தகவல்கள் பின்வருமாறு
Image : Kuwait Airport
குவைத்தில் பிப்ரவரி-21 முதல் வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை சிவில் விமான இயக்குனரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது
குவைத் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் டிஜிசிஏ இன்று(18/02/21) வியாழக்கிழமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது அதன் விரிவான தகவல்கள் பின்வருமாறு:
1. குவைத் அறிவித்துள்ள முசாபர் செயலி வழியாக நாட்டிற்கு வருகின்ற பயணிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்யவில்லை என்றால் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
2 குவைத் வரும் அனைத்து பயணிகளும் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். இதற்கான கட்டணம் பயணியிடமிருந்து முசாபர் செயலி வழியாகவோ அல்லது விமான நிறுவனங்கள் வழியாகவோ அல்லது விமான நிலையத்தில் வைத்தோ வசூலிக்கப்படும்.
Image : Page-1
3. குவைத்தில் நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தல்(institutional quarantine) விதிக்கப்படும்.இதற்கான கட்டணம் பயணியிடமிருந்து வசூலிக்கப்படும். முசாபர் செயலி மற்றும் பெல் சலாமா ஆகியனவற்றை வீட்டுத் தொழிலாளர்கள் இதற்காக பயன்படுத்த வேண்டும்.(வீட்டுத் தொழிலாளர்கள்,சுகாதரத்துறை மற்றும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட நபர்கள்)
4) பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு,7 நாள் நிறுவன தனிமைப்படுத்தல்(institutional quarantine) செய்து கொள்ள வேண்டும். இதற்காக பயணி குவைத் முசாபர் ஆப் மூலம் தன்னை பதிவு செய்து கொள்ள வேண்டும், மேலும் அவர் குவைத்தில் நுழைந்து ஆறாவது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும், இதில் முடிவு எதிர்மறையாக இருந்தாலும், மீதியுள்ள 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலும் இவர்களுக்கு கட்டாயமாகும்.
Image : Page-2
5) பெல் சலாமா செயலியில் பதிவு செய்யப்பட்ட வீட்டுத் தொழிலாளர்களை குவைத்திற்குள் அனுமதிப்பது தொடரும். மேற்கூறிய வழிகாட்டுதல்களை பயணிகள் பின்பற்றி வருகின்றார்களா என்பது உறுதி செய்வது விமான நிறுவனங்களின் பொறுப்பாகும். இதை மீறினால் விமான நிறுவனங்களிடமிருந்து இதற்காக இழப்பீடு வசூலிக்கப்படும் என்றும் டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image : Page-3
மேலும் பிப்ரவரி-21 முதல் தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து நேரடியாக குவைத்துக்கு வருபவர்களுக்கு 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தல் என்று கூறப்பட்டுள்ளது, இது சுகாதரத்துறை ஊழியர்கள், அரசு சார்ந்த சிறப்பு அனுமதி உள்ள சில பிரிவினர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களை குறிக்கிறது. ஆனால் சில இணைய தளங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த பயணிகள் நேரடியாக குவைத்தில் நுழைய நிலுவையிலுள்ள தடையினை நீக்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. தடை நீக்கியது தொடர்பான எந்த தகவலையும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் டிஜிசிஏ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடவில்லை. ஆனால் இது தொடர்பான தெளிவாக விளக்கம் வரும் மணிநேரத்தில் வெளியாகலாம்.