கொரோனா காலத்தில் வளைகுடாவில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் உறவுகளுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது
கொரோனா காலத்தில் வளைகுடாவில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் உறவுகளுக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பு
இந்த கொரோனோ கால கட்டத்தில் வேலையிழந்து வெளிநாட்டிலிருந்து தாயகம் சென்றிருக்கும் தமிழர்களுக்காக தொழில் தொடங்க கடன் உதவி வழங்குவதாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தமிழ் சொந்தங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தாங்களும் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதன் முதற்கட்டமாக திருவாரூரில் VTNS மாநில பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் அவர்களின் முயற்ச்சியில் மாநில தலைவர் கமால் அப்துல் நாசர் முன்னிலையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை படி ஒரு முகாம் ஏற்பாடு செய்து அதில் கடன் பெற தகுதியுடையவர்களுக்கு கடன் உதவி பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கமும் இணைந்து நடத்தும் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய வேலையற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் வயது வரம்பு 18 முதல் 55 வரை உள்ளோர் கலந்து கொள்ளலாம்,நாள் 01/03/2021 திங்கட்கிழமை ,நேரம் மதியம் 2:00 மணியளவில், இடம் மாவட்ட தொழில் மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,பெருந்திட்ட வளாகம், விளமல்,திருவாரூர் மேலதிக விபரங்களுக்கு, திருவாரூர் தொடர்புக்கு 7904045471,8608934269, 9842016362. இது தொடர்பாக செய்தியை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் செய்திக்குறிப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது.