சவுதியில் கொலை வழக்கில், வாரிசுகளின் ஒப்புதலுடன் ஒருவருக்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
சவுதியில் கொலை வழக்கில், வாரிசுகளின் ஒப்புதலுடன் ஒருவருக்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
சவுதியில் கொல்லப்பட்டவரின் வாரிசுகள் மேஜர் வயதை அடையும் வரையில் காத்திருந்து அவர்கள் அனுமதியுடன் சவுதி குடிமகன் ஒருவருக்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபரின் வாரிசுகள் விபரம் அறியும் வயதை அடையும் வரை காத்திருந்த பின்னர், அதிகாரிகளால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.சவுதி குடிமகனை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சவுதி குடிமகனை தூக்கிலிட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அலி சலே அல் யாமியை என்ற நபரை சுட்டுக் கொன்றதற்காக முஹம்மது பின் லாபீர் பின் அப்பாஸுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் இடையிலான வாய்மொழி தகராறு ஏற்பட்டு இறுதியில் இந்த கொலை நடந்தது என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் முன்னதாக மரணதண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் இறந்தவரின் வாரிசுகள் சிறார்களாக இருந்ததால் தண்டனை தாமதமானது. இப்போது வாரிசுகள் விபரம் அறியும் வயதை அடைந்த நிலையில் முந்தைய தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இன்று சவுதியின்,நர்ஜானில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.