துபாயில் இனிமுதல் உங்கள் முகமே பயண ஆவணம்;உங்கள் பாஸ்போர்ட் பையில் இருந்தால் போதும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது
Image : Dubai Airport
துபாயில் இனிமுதல் உங்கள் முகமே பயண ஆவணம்;உங்கள் பாஸ்போர்ட் பையில் இருந்தால் போதும்
துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும்போது உங்கள் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தி உங்கள் பயணம் தொடர்பான செயல்முறையை நீங்கள் முன்பு முடித்திருக்கலாம், ஆனால் விமானத்தில் டிக்கெட் சோதனை கவுண்டரில் விமானம் ஏறும் வரையில் இப்போது உங்கள் முகத்தைக் காட்டி பயணிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு பயோமெட்ரிக் அதிவேக பயண முறையினை முடிக்கும் வசதி ஆகும்.இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பயணிகளின் முகங்களையும் கண்களையும் கண்டுபிடிக்கும். இந்த செயல்முறைக்கு பாஸ்போர்ட் மட்டுமல்ல, போர்டிங் பாஸும் தேவையில்லை என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. உங்கள் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் சரியான நேரத்தில் அனைத்தும் செய்து முடிக்கும்.சுருக்கமாக சொன்னால் உங்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக முகத்தை பயன்படுத்தி விமானத்தில் பறக்க முடியும் என்று அர்த்தம். இந்த பயணங்கள் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 5 முதல் 9 வினாடிகளில் முடிக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.