துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய செய்தி; தாயகத்தில் இருந்து துபாய் திரும்பும் போது இனிமுதல் GDRFA ஒப்புதல் தேவையில்லை
துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை புதிய செய்தி
தாயகத்திலிருந்து துபாய் திரும்பும் துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு General Directorate of Residency and Foreigners Affair யின் ஜி.டி.ஆர்.எஃப்.ஏ ஒப்புதல் இனிமுதல் தேவையில்லை என்ற புதிய தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை எமிரேட்ஸ் ஏர்லைன் கால் சென்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி-12 முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. முன்னதாக, துபாய் குடியிருப்பு விசா வைத்திருக்கும் அனைவருக்கும் துபாய் திரும்புவதற்கு ஜி.டி.ஆர்.எஃப்.ஏ அனுமதி தேவைப்பட்டது. எனவே இனிமுதல் துபாய் விசா வைத்திருப்பவர்கள் துபாய் திரும்புவதற்கான ஒரே நிபந்தனை புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு மிகாத எதிர்மறை கோவிட்-19 பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் மட்டுமே என்பது தெளிவாகியுள்ளது.