குவைத்தில் இன்று மாலையுடன் வலுவான தூசி காற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கே.சி.எம்.சி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் இன்று மாலையுடன் வலுவான தூசி காற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
குவைத்தில் இன்று(17/02/21) வெப்பமான வானிலையுடன், மாலையில் இருந்து பலத்த தூசி காற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் தூசி படலம் உருவாகும். எனவே தூரப்பார்வை 1,000 மீட்டருக்கும் குறைவாக இருக்கும், வாகன ஓட்டிகள் இதன் காரணமாக கவனமாக இருக்க வேண்டும். கடல் அலைகள் ஏழு அடிக்கு மேல் ஏழும்பும், இன்று நள்ளிரவுக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. குவைத்தில் நிலவும் இந்த வானிலை புதன்கிழமை இரவு குளிர்ந்த காலநிலையுடன் முடிவடையும் எனவும், வியாழக்கிழமை பிற்பகலுக்கு பின்னர நாட்டில் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் குவைத் வானிலை ஆய்வு மையம் கே.சி.எம்.சி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.