குவைத்திற்கு பிற நாடுகளை புகலிடமாக கொண்டு குடிமக்களை அனுப்புவதை எகிப்து நிறுத்தியுள்ளது; இது தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது
குவைத்திற்கு பிற நாடுகளை புகலிடமாக கொண்டு குடிமக்களை அனுப்புவதை எகிப்து நிறுத்தியுள்ளது
குவைத்துக்கு தங்கள் குடிமக்களை பிற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு தங்கியிருந்து நுழைய அனுமதிக்கும் மறைமுகமாக திட்டத்தை எகிப்து காலவரையின்றி நிறுத்தியுள்ளது. இதன் மூலம் எகிப்து நாட்டவர்கள் குவைத்திற்கு நேரடி விமான சேவை துவங்கினால் மட்டுமே இனிமுதல் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோவிட் வைரஸ் பரவல் காரணமாக குவைத்தில் வெளிநாட்டினர் இரண்டு வாரங்களுக்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. திடிரென அறிவிக்கப்பட்ட இந்த தடை காரணமாக சுமார் 3,000 எகிப்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதையடுத்து எகிப்திய குடிவரவு அமைச்சகம் சிக்கியுள்ள தங்களை மக்களை திரும்பி அழைத்துவர கட்டுபாட்டு அறை துவங்கி மக்களை தாய்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. குவைத் விமானப் பயணத்திற்கு அடிக்கடி கட்டுப்பாடுகள் விதிப்பதால்,தற்போதைய சூழ்நிலையில் எகிப்திலிருந்து குவைத்திற்கு நேரடியாக பயணத்தை தவிர்த்து மறைமுகமாக நுழைவு வழிவகை செய்யும் பேக்கேஜ் திட்டத்தை டிராவல் ஏஜென்சிகள் வழங்க வேண்டாம் என்று அரசாங்கம் இப்படிப்பட்ட டிராவல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமைகள் கட்டுப்பாட்டில் வந்து, விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் குவைத்துக்கு எகிப்திய குடிமக்களின் விமான போக்குவரத்து பயணம் தொடர்பான தடை தொடரும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.