குவைத் அமைச்சரவை தற்போது அதிரடியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது;வரும் மணிநேரத்தில் கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
Image : Kuwait City
குவைத் அமைச்சரவை தற்போது அதிரடியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது
குவைத்தில் அடுத்த வாரம் முதல் கிளப்புகள் மற்றும் சலூன்களை மூட தற்போது நடைபெற்று வருகின்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் இரவு 8 மணி முதல் வணிக வளாகங்களை மூடுவதற்கும், உணவகங்களின் செயல்பாட்டை இரவு 8 மணி வரை மட்டுப்படுத்தவும் கூட்டம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், இரவு 8 மணிக்குப் பிறகு வீட்டு விநியோக( Home Delivery) சேவைகளை வழங்க உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூட்டம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், விமான நிலையத்தை மூடுவதா அல்லது பகுதி ஊரடங்கு உத்தரவு விதிப்பதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் கொரோனா அவசரக் கால குழுவின் பரிந்துரை அடிப்படையிலு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு இந்த மாதம் இறுதி முதல் ஒருவார கால நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) ஏற்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் மணிநேரத்தில் கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.