குவைத்திற்கு பிப்ரவரி-21 முதல் வருகின்ற அனைவருக்கும் நிறுவன தனிமைப்படுத்தல் என்ற முடிவு உறுதியாகியுள்ளது;சற்றுமுன் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
Image : Kuwait Airport
குவைத்திற்கு பிப்ரவரி-21 முதல் வருகின்ற அனைவருக்கும் நிறுவன தனிமைப்படுத்தல் என்ற முடிவு உறுதியாகியுள்ளது
குவைத் சர்வதேச விமான நிலைய விவகாரங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரல் சலே-அல்-பத்தாகி வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில்,நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்கள் குவைத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் நடத்தபடும் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான செலவை வசூலிக்க வேண்டும் எனவும் மற்றும் குவைத்-டிராவலர் தளத்தில் பயணிகள் விபரங்களை பதிவு செய்வது மற்றும் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலை(Institutional Quarantine) முன்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில், குவைத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் நிறுவன தனிமைப்படுத்தலை அமல்படுத்த வேண்டும் என்ற அமைச்சரவை முடிவின் அடிப்படையில் இந்த தீர்மானம் எனவும்,பிப்ரவரி-21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் குழுவின் முடிவுகளுக்கு விமான நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டியதன் அவசியத்தையும், மேற்கூறிய முடிவுகளை பூர்த்தி செய்யாவிட்டால் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்கக்கூடாது என்பதையும், குவைத்-டிராவலர் தளத்தில் தனிமைப்படுத்தல் முன்பதிவு செய்வதையும் இந்த சுற்றறிக்கையில் தெளிவாக வலியுறுத்தி உள்ளது. இந்த முடிவுகளை மீறுபவர்கள் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Image : Official Soure