வளைகுடாவில் கொரோனா தடுப்பூசி எடுத்தும்,அலட்சியம் காரணமே நோய்தொற்று தாக்குகிறது நிபுணர்களின் எச்சரிக்கையினை கடைப்பிடியுங்கள்
Image credit: Dubai Bus Stop
வளைகுடாவில் கொரோனா தடுப்பூசி எடுத்தும்;அலட்சியம் காரணமே நோய்தொற்று தாக்குகிறது
கடந்த பல வாரங்களாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 3,000 ஆகவும்,இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அபுதாபியில், அரசாங்க மற்றும் அரசு கட்டுப்பாட்டிலுள்ள அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு(Work from Home) திரும்பிவிட்டனர். துபாயின் குளோபல் வில்லேஜ் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எமிரேட்ஸின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தி வைத்துள்ளது அரசாங்கம். சுருக்கமாக கூறினால் தற்போதைய நிலை அவ்வளவு சுபமாக இல்லை என்பதாகும்.
ஆனால் இன்று வரையிலும் நம்முடைய நண்பர்கள் மால்கள் மற்றும் பூங்காக்கள் வரை சென்று இது எதுவும் ஒரு பிரச்சினை இல்லை என்று தினசரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நபர்களின் கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய கோவிட் பரவல் நாட்டில் இருந்தால் ஏன்....?? Lockdown போடவில்லை என்பதும்.... இன்னொரு கேள்வி என்னவென்றால், கோவிட் தடுப்பூசி எடுத்தாலும் சாகவில்லையா என்பதுதான்....
நீங்கள் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது டோஸ் எடுத்து 28 நாட்களுக்குப் பிறகு மட்டுமே தடுப்பூசி செயல்படும் என்று சுகாதார நிபுணர்கள் பலமுறை தெளிவாக கூறியுள்ளனர். முதல் ஊசிக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் முகமூடிகள் மற்றும் கையுறைகளை தூக்கி எறியும் நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. விஷயங்களைப் புரிந்து கொள்ளாததற்காக தடுப்பூசியின் மீது பழிபோடுவதில் அர்த்தமில்லை. ஊரடங்குக்காக காத்திருக்க தேவையில்லை, ஒரே வழி உங்களை நீங்களே தற்காத்துக் கொள்வதுதான். மேலும் குவைத்,சவுதி,கத்தார்,ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் இதை நிலைதான்.