குவைத்தில் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் பற்றாக்குறை மோசமடைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது; இது தொடர்பாக இருதுறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் பற்றாக்குறை மோசமடைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்துல்லா அல் தமாக் மற்றும் உள்நாட்டு வீட்டுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அலி-அல் -ஷயன் ஆகியோர் நாட்டின் பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையான அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் விவசாயத்துறையில் உள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் உள்ளது எனவும் மற்றும் புதிய தொழிலாளர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இந்த துறையின் எதிர்காலம் ஆபத்தில் போய் முடியும் எனவும் உற்பத்தி பொருட்களை பண்ணைகளில் இருந்து சந்தைக்கு கொண்டுச் செல்ல தொழிலாளர்களை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இதுபோல் நாட்டில் சுமார் 180,000 Domestic தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் அப்துல்லா அல் தமாக் கூறினார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்படுவதற்கு முன்பே தொழிலாளர்கள் பற்றாக்குறை எதிர்கொள்ளபட்டது எனவும்,நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு மற்றும் விமான நிலையம் மூடல் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்தது எனவும்,குவைத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியே மட்டுமே விமானங்கள் சேவை வழங்கப்பட்டதன் காரணமாக பலரால் குவைத் திரும்பும் முடியவில்லை மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியதும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.