இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கோவிட்டைத் தொடர்ந்து சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள்(தடை) மார்ச்-31,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது. அதே வேளையில் DGCA-யால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. மேலும் அந்த அறிக்கையில் சூழ்நிலைகளைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் Air-Bubble போன்ற ஒப்பந்தங்கள் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களின் சேவைகள் அனுமதிக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Image credit:DGCA Official
நாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச்,2020 முதல் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தொடர்பான தேதி பலமுறை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இந்த பிப்ரவரி-2021 இறுதியுடன் கடைசியாக விதிக்கப்பட தேதி முடிவடையும் இந் நிலையில்,இன்று மீண்டும் மார்ச்-31,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு இறுதியில் விலக்கப்பட்டு, உள்நாட்டு சேவைகள் மீண்டும் தொடங்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.