குவைத் திரும்புவதற்காக துபாயில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த நிஷாம்(வயது-45)
குவைத் திரும்புவதற்காக துபாயில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்
இந்தியாவில் இருந்து குவைத் திருப்புவதற்காக துபாயில் வந்து அங்கு தற்காலிகமாக தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் இந்தியா,கேரளா மாநிலம்,திருச்சூர் பெரிஞ்சனம் பகுதியை சேர்ந்த நிஷாம்(வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக கத்தாரில் வேலை செய்து வந்த நிஷாம் வேலை மாறுதல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குவைத்திற்கு வந்துள்ளார். இவர் குவைத்தின் KEO இன்டர்நேஷனல் கன்சல்டன்ட்ஸி கம்பெனியில் Draftsman ஆக வேலை செய்து வந்தார்.
குவைத்திற்கு வேலை மாறுதல் பெற்று வந்த நிஷாம் குடும்பத்துடன் சல்மியா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு ரபீனா என்ற மனைவியும் அமிஹா, ஆக்செல் மற்றும் அக்கு என்ற மூன்று குழந்தைகளும் உள்ளது. அவர் நேரடியாக குவைத்துக்கு வர அனுமதிக்கப்படாததால் துபாய் வழியாக வருவதற்கான முயற்சியில் இப்படி பரிதாபமாக உயிரிழந்தார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதேபோல் குவைத்தில் நுழைவதற்காக துபாயில் காத்திருந்த மற்றொரு இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தது யாரும் மறந்திருக்க வாய்பில்லை.