நாம் இன்று பார்க்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சிறகுகள் கொடுத்த இந்தியர் ஜி.ஜி.கே நாயர் காலமானார்;59-ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார்
நாம் இன்று பார்க்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சிறகுகள் கொடுத்த இந்தியர் ஜி.ஜி.கே நாயர் காலமானார்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் நிறுவனர்களில் ஒருவரும், நிர்வாக குழு உறுப்பினருமான ஜி.ஜி.கே நாயர் தனது 84-வயதில் காலமானார்,இவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்,கடந்த 59-ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். 1964 ஆம் ஆண்டில் அவர் தினாட்டா நிறுவனத்தில் கணக்கு மேலாளராக ஆனபோது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.அதுதான் எமிரேட்ஸ் செயற்குழுவில் உறுப்பினர் ஆனது,இதுவும் அந்த குழுவில் இருந்த ஒரே இந்தியரும் இவர்தான்.
ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்பே இங்கு வந்த வெளிநாட்டவர்களில் இவரும் ஒருவர். அவர் தினாட்டாவில் பணிபுரிந்த காரணத்தால் 'தினாட்டா நாயர்' என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர் எமிரேட்ஸ் தலைமையில் தலைவர்களில் ஒருவரானார். அவருடன் இந்த குழுவில் இரண்டு அரேபியர்களும், நான்கு ஐரோப்பியர்களும் இருந்தனர். நிறுவன செயலாளராக 2013-ல் எமிரேட்ஸில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, அவர் எமிரேட்ஸ் விசாவில் அங்கே அமீரகத்திலேயே வாழ்ந்து வந்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள மோடல் பள்ளி மற்றும் புனித ஜோசப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். பி.எஸ்சி பட்டம் பெற்ற பிறகு, 1950 களில் ரயில்வேயில் பணியாற்றினார். அவர் வெளிநாட்டு வாழ்க்கை பயணமாக டிசம்பர் 26, 1961 அன்று ஷார்ஜா வந்தார். தன்னுடைய ஊரை சேர்ந்த பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைக்க வழிவகை செய்தார். அவரிடம் ஒரு கூட்டம் கார்களின் Collection இருந்தது,அதிலும் அவரது பழைய மெர்சிடிஸ்பென்ஸ் கார் 'துபாய் 364' என்ற எண்ணைக் கொண்டு காரை இறக்கும் வரையில் உடன் வைத்திருந்தார்.
உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார். அவரது உடல் ஜெபல்-அலி சோனாபூர் கல்லறையில் தகனம் செய்யப்பட்டது. இளைய மகன் நந்தா நாயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வங்கி அதிகாரியாக வேலை செய்து வருகின்றார் மற்றும் இளைய இரண்டு குழந்தைகள் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.