குவைத் மருத்துவமனையில் 2 மாதங்களாக சிகிச்சையில் இருந்த தமிழர் மரணம்;உடல் இன்று இரவு 9 மணியளவில் கத்தார் விமானம் மூலம் சேகரின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும்
Image: Arab tamil daily
குவைத் மருத்துவமனையில் 2 மாதங்களாக சிகிச்சையில் இருந்த தமிழர் மரணம்;உடல் இன்று தாயகம் செல்கிறது
இந்தியா,தமிழகம்- தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ஆதிதிராவிடர் தெற்கு தெரு குமுந்தபுரத்தை சேர்ந்த குருசாமி மற்றும் செல்லம்மாள் ஆகியோரின் மகன் சேகர்(வயது-42). குவைத்தில் வேலை செய்து வந்தநிலையில் தீடிரென மயங்கி கீழே விழுந்துள்ளார்,தொடர்ந்து அதான்(Adan) மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் சுயநினைவின்றி இருந்த சேகர் அவர்கள் கடந்த சனிக்கிழமை(30/01/21) உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பான தகவலை அறிந்த உறவினர்கள் உடலை தாயகம் அனுப்ப வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் நிர்வாகத்தை நாடியுள்ளது.இதையடுத்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் மஜீத், துணை செயலாளர் அப்துல் ஹமீத், ஆலோசகர் அப்துல் மஜீத் மற்றும் இறந்த சேகரின் உறவினர்கள் முயற்சியால், குவைத் மற்றும் இந்திய தூதரக சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிக்க பட்டநிலையில் இன்று(02/01/21) செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் சபா மருத்துவமனை பிணவறையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு,பின்னர் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் அவரது உடல் பெட்டியில் வைத்து சீல்வைக்கப்படும். அதை தொடர்ந்து இன்று இரவு 9 மணியளவில் கத்தார் விமானம் மூலம் சேகரின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் K.V.கண்ணன் அவர்களின் முயற்சியால்,தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து அவசரஊர்தி மூலம் மூன்று கட்டமாக தென்காசி வரையில் சேகரின் உடலை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கடையநல்லூருக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.