சவுதியில் நுழைய காத்திருக்கும் நபர்களுக்கு ஆறுதலான செய்தி;ஓமான் வழியாக இந்தியர்கள் நாட்டில் நுழையலாம் என்ற நம்பகமான செய்தி வெளியாகியுள்ளது
சவுதியில் நுழைய காத்திருக்கும் நபர்களுக்கு ஆறுதலான செய்தி;ஓமான் வழியாக இந்தியர்கள் நாட்டில் நுழையலாம்
துபாய் வழியாக இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சவுதியில் நுழைவது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், இந்தியர்கள் இன்னும் ஓமான் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைகிறார்கள் என்று டிராவல் ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர். ஓமானில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கழித்த வெளிநாட்டவர்கள் இன்று மற்றும் கடந்த சில நாட்களில் சவுதியில் நுழைந்ததாக கோட்டக்கல் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் பஷீர் தெரிவித்தார் என்று Online தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கான தடை நிலுவையிலுள்ள நிலையில் இந்தியர்கள் ஓமான் வழியாக பயணிக்க முடியுமா....??? என்ற கேள்விக்கு இதன் மூலம் பதில் கிடைத்துள்ளது. டிராவல்ஸ் நிறுவனங்கள் சாதாரண வெளிநாட்டினருக்கு மலிவு விலையில் இதற்காக பேக்கேஜ் கொண்டு வந்தால் அது ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.