குவைத்தில் இருந்து இலங்கைக்கு ஜசீரா ஏர்வேஸ் நேரடி விமான சேவையினை துவங்குகிறது;தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் ராமச்சந்திரன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்
Image credit : Jazzera Airline Official
குவைத்தில் இருந்து இலங்கைக்கு ஜசீரா ஏர்வேஸ் நேரடி விமான சேவையினை துவங்குகிறது
இலங்கையின் தலைநகருக்கு(கொழும்பு) புதிய நேரடி விமான சேவைகளை குவைத் அரசு விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜசீரா ஏர்வேஸ் தொடங்குவதாக அறிவித்துள்ளது.வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இரு திசைகளுக்கும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜசீரா ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் ராமச்சந்திரன் கூறியதாவது, உலகளாவிய பயண சேவையினை துவங்குவதற்கான திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான எங்கள் முதல் புதிய விமான சேவைகளை நாங்கள் தொடங்குகிறோம் என்றார். இதுபோல் இலங்கையின் தலைநகரில் இருந்து இரண்டு விமான சேவைகள் வீதம் வளைகுடாவின் அனைத்து இடங்களுக்கும் வழங்க உள்ளதாக அவர் தெரிந்துள்ளார். இதுபோல் இந்த ஆண்டில் கொழும்புக்கு விமானங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க ஜசீரா ஏர்வேஸ் விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
குவைத்திலிருந்து கொழும்பு செல்லும் விமான அட்டவணை பின்வருமாறு இருக்கும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான எண்(J9 551), குவைத்திலிருந்து கொழும்பு சேவையினை வழங்கும், இதுபோல் திருப்பி விமான எண்(J 9 552) திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவைத்திற்கு சேவையினை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பிற்கான விமான சேவைக்கு புதிய ஏர்பஸ் ஏ 320 விமானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தினருக்கும், இந்த நாட்டிற்கு வருகை தர விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நாங்கள் இப்போது இந்த புதிய முடிவு மூலம் சேவை செய்ய முடிகிறது, பயணிகள் அவர்கள் பயணிப்பதற்கு முன்பு குவைத் அரசு மற்றும் இலங்கை அரசு விதித்துள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக ஜசீரா ஏர்வேஸ் நிர்வாகம் தனது விமானத்திலும், குவைத்தில் உள்ள ஜசீரா விமானங்கள் இயக்கப்படும் முனையம் T5 பயணிகளின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கையினை எடுத்துள்ளது.இதுபோல் சவுதியில் இருந்து Gulf Air விமான நிறுவனம் இலங்கையின் தலைநகருக்கு(கொழும்பு) வாரத்தில் இரண்டு சேவைகளை வருகின்ற 15/02/21 முதல் துவங்கவுள்ளது என்ற செய்தியினையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.