கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த குழந்தைக்கு 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு; இதை விபத்தில் குழந்தையின் தந்தையும் உயிரிழந்தார்
Image credit: crash Air India Flight 1344
கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த குழந்தைக்கு 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கரிபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடந்த எதிர்பாராத விமான விபத்தில் விமானி உட்பட 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 169 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 2-வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1.51 கோடி இழப்பீடு வழங்குவதாக நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் இன்று அறிவித்துள்ளது. குழந்தையின் தந்தையும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.இறந்த குழந்தை கோழிக்கோடு குன்நமங்கலத்தைச் சேர்ந்த ஷராபுதீன் மற்றும் அவரது மனைவி அமீனா ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி நகரேஷ் உத்தரவிட்டார். இருப்பினும், விபத்தில் இறந்த ஷராபுதீன் மற்றும் காயமடைந்த அமீனா ஆகியோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்த தொகையை தீர்மானிக்க போதுமான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் குடும்பத்தினரை அறிவித்தனர்.