குவைத் சர்வதேச விமான நிலையம் மார்ச்-7 முதல் 24 மணிநேரமும் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;இது தொடர்பாக அறிக்கை மாலையில் வெளியாகியுள்ளது
Image : Kuwait Airport
குவைத் சர்வதேச விமான நிலையம் மார்ச்-7 முதல் 24 மணிநேரமும் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத் சர்வதேச விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறையின் பொது நிர்வாக இயக்குநர் அப்துல்லா அல்-ராஜி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய விமான சேவைகள் நிறுவனத்தின் (NAS) பொது மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குவைத் சர்வதேச விமான நிலையம் அடுத்த மார்ச் 7 முதல் 24 மணி நேரமும் இயக்க முடிவு செய்துள்ளது எனவும், எனவே குவைத் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் சேவைகளின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய விண்ணப்பங்களை சிவில் விமான போக்குவரத்து பொது நிர்வாகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.
Image credit: Official Letter
இருப்பினும், அதிக அளவிலான கொரோனா பரவல் காரணமாக தற்காலிக தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் குவைத் திரும்புவதற்காக வான்வெளியைத் திறக்க அமைச்சரவை ஒப்புதல் தேவை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது குவைத் விமான நிலையம் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயணிகளுக்கான விமான சேவையினை வழங்கி வருகிறது. மேலும் இரவு 8 முதல் அதிகாலை 4 வரையில் சரக்கு விமானங்களின் சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.