குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இன்று இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பாக செய்தி மாலையில் வெளியாகியுள்ளது
Image: Kuwait Court
குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இன்று இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
குவைத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா அல்-ஒத்மான் தலைமையிலான குழு இன்று(18/02/21) வியாழக்கிழமை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தாக தினசரி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருட்களை நைலான் பையில் நிறைத்து ,நாட்டில் வெவ்வேறான இடங்களில் மறைத்து வைத்து, இருப்பிடத்தை வாட்சப் வழியாக அனுப்பி சம்பந்தப்பட்ட நபருக்கு விற்பனை செய்து வந்ததை வாடிக்கையாக கொண்டு இருந்தார் எனவும், பணத்தை வங்கி கணக்கு லிங் வழியாக பெற்று வந்தார் எனவும் வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் துவக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் போனில் இருந்து இந்த வழக்கு தொடர்பான பல ஆதாரங்கள் கைப்பற்றியதன் அடிப்படையில் வழக்கின் உண்மைகள் தெரியவந்தன எனவும்,குற்றவாளி இந்த புதுமையான முறையினை பயன்படுத்தி 50 ற்கும் மேற்பட்ட போதை பொருள் விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார் எனவும், மேற்கொண்டு நடத்த விசாரணைக்கு, அவர் பல ஆண்டுகளாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது கண்டறியப்பட்டது எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்த கூடுதல் தகவல் எதுவும் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.