குவைத்தில் தினசரி பாதிப்பு பல மாதங்களுக்கு பிறகு 1000 கடந்தது;6 பேர் உயிழந்தனர் எனவும் சுகாதரத்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தில் தினசரி பாதிப்பு பல மாதங்களுக்கு பிறகு 1000 கடந்தது;6 பேர் உயிழந்தனர்
குவைத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று(09/02/21) திடிரென தினசரி கொரோனா பாதிப்பு 1002 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல் கடந்த சில மாதங்களாக இல்லாத அளவுக்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த நபர்களின் எண்ணிக்கை 3000 ற்கும் கீழ் வந்த நிலையில்,கடந்த சில வாரங்களில் தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில் இன்று நிலவரப்படி 9,310 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுபோல் 591 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குவைத்தில் கொரோனா துவங்கியது முதல் இன்று வரையில் 172,996 பேர் பாதிக்கப்பட்டனர்.162,711 பேர் நோய் பாதிப்பிலிருந்து இதுவரையில் மீட்டனர். 975 பேர் இதுவரையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.