குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் பதவி விலகியுள்ளார்; ராஜினாமாவுக்கான தெளிவான காரணம் உடனடியாக தெரியவில்லை
Image: Deputy Foreign Minister Khaled
குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் பதவி விலகியுள்ளார்
குவைத்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் இன்று(01/02/21) பதவி விலகியுள்ளார், தொடர்ந்து ராஜினாமாவை சமர்ப்பித்ததாக அல்-ஜரல்லா ஊடகங்களுக்கு தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் ஷேக் டாக்டர். அஹ்மத் அல் நாசர் அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இவருடைய ராஜினாமாவை தொடர்ந்து தூதர் ஜமால் அல்-கானெம் அவர்களை இடைக்கால இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.குவைத்தின் வெளியுறவு பிரச்சினைகளை தீர்ப்பதில் ஷேக் காலித் அல் ஜரல்லா முக்கிய நபராக இருந்தார். ராஜினாமாவுக்கான தெளிவான காரணம் உடனடியாக தெரியவில்லை.