BREAKING NEWS
latest

Saturday, February 6, 2021

குவைத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டினர் நுழைய தடை;மேலும் சிலருக்கு விலக்கு அளித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டினர் நுழைய தடை;மேலும் சிலருக்கு விலக்கு அளித்து புதிய அறிவிப்பு இன்று அதிகாலை வெளியாகியுள்ளது

குவைத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டினர் நுழைய தடை;மேலும் சிலருக்கு விலக்கு அளித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் நாளை(07/02/21) ஞாயற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு, அதாவது பிப்ரவரி-21(ஞாயற்றுக்கிழமை) வரையில் முதல்கட்டமாக வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேரடியாக நுழைய தடை,கடந்த பல மாதங்களாக நடைமுறையில் உள்ள நிலையில் மறைமுகமாக துபாய் உள்ளிட்ட நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத்தில் நுழையும் வாய்ப்பும் புதிய அறிவிப்பு மூலம் தடைபட்டுள்ளது.

ஆனால் இந்த தடையில் இருந்து குவைத் குடிமக்கள்,அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு(Article-20) விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(06/02/21) அதிகாலையில் புதிய அறிவிப்பு ஒன்றை சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ளது, அதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் நாட்டின் இராஜங்க துறையில்(Diplomatic Corps) பணிபுரியும் நபர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ள நபர்கள் நாளை(07/02/21) முதல் நாட்டில் நுழைந்தாலும் முதல் 7 நாட்களுக்கு உள்ளூர் ஹோட்டலில் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) செய்யவும் மற்றும் மீதியுள்ள 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Add your comments to குவைத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டினர் நுழைய தடை;மேலும் சிலருக்கு விலக்கு அளித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

« PREV
NEXT »