குவைத்தில் விட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் கவனத்திற்கு;சரியான வழிகாட்டுதலை தெளிவாக அறிந்து அதன்படி செல்லுங்கள்
குவைத்தில் விட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் கவனத்திற்கு;விழிப்புணர்வு செய்தி
குவைத்தில் வீட்டு வேலைக்காக(Article-20) வந்து பிறகு வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இந்திய தூதரகத்திற்க்கு வரும் விட்டு வேலை தொழிலார்களிடம், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விட்டு,விட்டு வேலை தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு அனுப்புவார்கள்(குவைத் அரசின் கீழ் இயங்கும் நீதிமன்றம் ஆகும்).நீங்கள் அங்கு செல்லும்போது சிவில் ஐடி நகல், விசா நகல்(சிவில் ஐடி இல்லை என்றால் விசா நகல் கண்டிப்பாக வேண்டும்) மற்றும் பாஸ்போர்ட் நகல்,உங்கள் முதலாளியின் தொடர்பு எண் மற்றும் தொழிலாளியின் தொடர்பு எண் ஆகிய நிச்சயமாக கைவசம் இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விட்டு வேலை தொழிலாளர் நீதிமன்றத்தின் வேலை நாட்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 12 வரை(கொரோணா பிரச்சினை இருப்பதால் நேரம் குறைக்கபட்டுள்ளது). இது அமைந்துள்ள இடம் ருமேத்தியா, காவல் நிலையம் பின்புறம், கிளினிக் அருகில் ஆகும். விட்டை விட்டு வெளியேறி வருபவர்கள் நேரடியாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வந்து வழக்கு பதிவு செய்ய முடியும். சரியான வழிமுறை தெரியாமல் சிலரின் தவறான வழி காட்டுதலால் நம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் குவைத்தில் உள்ள தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனை மற்றும் சந்தேகங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நீங்கள் +965 22215150 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்தது கொள்ளலாம். இந்த தகவலை சமூக ஆர்வலருமான ஆல்வின் ஜோஸ் அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.