குவைத்திற்கு வருகின்ற பயணிகளுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணத்தை Hotel Association வெளியிட்டுள்ளது;வெளிநாட்டினருக்கு இந்த கட்டணம் மற்றொரு பின்னடைவு என்றே தெரிகிறது
குவைத்திற்கு வருகின்ற பயணிகளுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணத்தை Hotel Association வெளியிட்டுள்ளது
குவைத்தில் வருகின்ற பயணிகளுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணத்தை ஹோட்டல் உரிமையாளர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. இது வருகின்ற பிப்ரவரி-21 முதல் நாட்டில் பயணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மற்றொரு பின்னடைவு என்றே தெரிகிறது. இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள செய்தியில் ஏழு நாள் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தல் தொடர்பான வாடகை விவரங்களை தெரியவந்துள்ளது.
முன்று நட்சத்திர ஹோட்டல்களில் காலை உணவு உட்பட ஏழு நாட்களுக்கு ஒரு அறைக்கு 120 தினார் மற்றும் இரட்டை அறைக்கு 180 தினார், மற்றும் தினசரி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 6 தினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் ஏழு நாட்களுக்கு காலை உணவு உட்பட ஒரு அறைக்கு 180 தினார்களும், இரட்டை அறைக்கு 240 தினார்களும், உணவுக்காக 8 தினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காலை உணவு உட்பட ஒரு அறைக்கு ஏழு நாட்களுக்கு 270 தினார், இரட்டை அறைக்கு 330 தினார், மற்றும் தினசரி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 10 தினார்கள் செலுத்த வேண்டும் என்று உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
Image credit: 3 Star Hotel
Image credit: 4 Star Hotel
Image credit: 5 Star Hotel