வெளிநாடுகளில் இருந்து குவைத் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுபாடுகள்; முனா தளம் அறிமுகப்படுத்த முடிவு;பயணிகளின் முழுமையான விபரங்கள் எளிதில் அறிய நடவடிக்கை என்று தெரிகிறது
வெளிநாடுகளில் இருந்து குவைத் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுபாடுகள்; முனா தளம் அறிமுகப்படுத்த முடிவு
குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான சுகாதாரத் கட்டுப்பாடுகள் விதிப்பதன் ஒரு பகுதியாக,புதிய 'முனா' என்ற மின்னணு நெட்வொர்க் அமைப்பு மூலம் நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் ஆரோக்கியம் உள்ளிட்ட சுகாதார தகவல்களை பெறமுடியும். இந்த மின்னணு நெட்வொர்க் தளத்தில் பதிவு செய்பவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் அரபு நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி விமான நிலைய இயக்குநரக அதிகாரிகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட புதியமுறை மூலம் நாட்டிற்கு வரவிருக்கும் பயணிகளின் ஆரோக்கிய விபரங்களையும் மற்றும் நாட்டிற்கு வருவதற்கு முன்பு பயணி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான தகவல்களையும் முழுமையாக அறிய முடியும். குவைத் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் அனைத்து பரிசோதனை மையங்கள் மற்றும் மின்னணு நெட்வொர்க்குகளுடன் 'முனா' இணைக்கப்பட்டுள்ளதால் பி.சி.ஆர் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து மிகவும் எளிதாக இருக்கும். நோய்தொற்று எதிர்மறை சான்றிதழ்களுடன் குவைத் விமான நிலையத்திற்கு வந்த சில பயணிகளிடம் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனை நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச்சூழலில்தான் பி.சி.ஆர் சோதனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரிகள் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடைய குவைத் விமான நிலையம் வருகின்ற பயணிகள் அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி-7 முதல் கொரோனா பரிசோதனை நடத்தபடும் எனவும், விமான முனையம் T1, T2, T3, T4 ஆகிய இடங்களில் இதற்கான பரிசோதனை மையங்கள் இயக்கத்திற்கு வரும் எனவும், அரசு சுகாதரத்துறையும், தனியார் பரிசோதனை மையங்களும் கொரோனா எதிர்மறை பரிசோதனையில் ஈடுபடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.