குவைத் மருத்துவமனைகளில் அவசரகால அறுவைச்சிகிச்சை தவிர்த்து மற்றவை தற்காலிக நிறுத்த முடிவு;இன்று மாலையில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
குவைத் மருத்துவமனைகளில் அவசரகால அறுவைச்சிகிச்சை தவிர்த்து மற்றவை தற்காலிக நிறுத்த முடிவு
குவைத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் இனி உயிர்காக்கும் அவசரகால அறுவைச்சிகிச்சை தவிர்த்து ,தேவையற்ற மற்ற அறுவைச்சிகிச்சைகள் மற்றொரு அறிவிப்பு வரும் வரையில் செய்யக்கூடாது எனறு சுகாதரத்துறை இணையமைச்சர் முஸ்தபா ரெடா ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டதாக உள்ளூர் செய்தித்தாள் இன்று(14/02/21) மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, கோவிட்- 19 நோயாளிகளுக்கு பொது மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் மற்றும் வார்டுகளை வழங்குவதே இந்த சுற்றறிக்கையின் நோக்கமாகும் எனவும் ,சில மருத்துவமனைகள் சமீபத்தில் நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டுகளை மீண்டும் திறந்துள்ளது எனவும், எனவே தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரதுறை அமைச்சக அமைப்புகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு மேலும் அதிக பணிச்சுமையை கொடுக்க அமைச்சகம் விரும்பவில்லை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.