குவைத்தில் கோவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 10,000 வரையில் அபாரதம்;நாட்டில் மக்கள் ஒன்றாக கூடும் நிகழ்வுகளை முற்றிலுமாக தவிர்க்கவும் அறிவுத்தல்
Image : Kuwait City
குவைத்தில் கோவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 10,000 வரையில் அபாரதம்
குவைத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ள நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கண்டறிப்படும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக 1969-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சுகாதாரத்துறை சட்டத்தின் 8-ஆம் பிரிவுக்கு இணங்க, மக்களின் பாதுகாப்பு தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் முடிவுகளையும் அறிவுறுத்தல்களையும் செயல்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி கோவிட் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ அல்லது 10,000 தினார்கள் வரையில் அபராதமோ, அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமான செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் மக்கள் ஒன்றாக கூடும் நிகழ்வுகளை முற்றிலுமாக தவிர்க்கவும்,மேலும் செய்தியில் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தனியார் வீடுகளில், திவானிகளில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் கொண்டாட்டங்களை நடத்த கூடாது என்றும் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளது.