குவைத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டாலும் வெளிநாட்டினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் தவிர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : வேலிகளை அகற்றும் ஊழியர்கள்
குவைத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டாலும் வெளிநாட்டினர் குடியிருப்புகள் தவிர்க்கப்படலாம்
குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சுகாதாரக் குழுவின் முன்மொழிவு திங்களன்று(16/02/21) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படாது என்றும்,அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது,அப்படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டாலும் வெளிநாட்டினர் வசிக்கும் குடியிருப்புகள் பகுதிகள் இதிலிருந்து தவிர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட புதிய கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் பெரும்பாலும் குடிமக்களிடையே பதிவாகின்றன என்பதே இதற்குக் காரணம் என்றும் நாளிதழ் தெளிவுபடுத்துகிறது.
இதற்கிடைய நாட்டில் கொரோனா பரவல் முதல்கட்டமாக கண்டறியப்பட்ட நேரத்தில் ஊரடங்குக்காக ஃபர்வானியா மற்றும் கைத்தானில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட முள்வேலிகளை பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் தலைமையில் அகற்றும் பணிகளை ஊழியர்கள் தொடங்கியுள்ளது. நாட்டில் கடந்த ஜூலை மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்தன, ஆனால் பொது சாலைகளில் சில தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த பகுதிகளில் உள்ள குடிமக்களும் புகார்களுடன் முன்வந்த நிலையில் இந்த நடவடிக்கை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபோல் ஜலிப், மஹ்பூலா மற்றும் ஹவேலி ஆகிய இடங்களில் தற்போதுள்ள முள்வேலி வேலிகளை அகற்றவும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது என்ற கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.