குவைத்திலிருந்து வெளிநாட்டினர் பெருமளவில் வெளியேற்றம்;குவைத்தில் வசிக்கின்ற மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையை 989,270 ஆக குறைந்துவிட்டது
குவைத்திலிருந்து வெளிநாட்டினர் பெருமளவில் வெளியேற்றம்;முதலிடத்தில் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
குவைத்திலிருந்து கோவிட் பரவல் ஏற்படுத்திய நெருக்கடி தொடர்பான காரணங்களால் 2020 ஆம் ஆண்டில்,நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 105,694 நபர்களின் குறைவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 2.2 சதவீதமாக சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 47.76 லட்சம் மக்கள் தொகை நாட்டில் இருந்த நிலையில்,2020 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை 46.70 ஆக குறைந்துவிட்டதாக புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. சிவில் தகவல் பொது ஆணையம்(PACI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, குவைத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 2020 க்குள் நான்கு சதவீதம் குறைந்தது கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 134,000 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
2019 ஆண்டு நாட்டில் 33.44 லட்சம் வெளிநாட்டினர் வசித்துவந்த நிலையில், 2020 ல் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 32.10 ஆக குறைந்துள்ளது. நாட்டில் இருந்து வெளியேறிய வெளிநாட்டவர்களில் 94 சதவீதம் பேர் ஆண்கள்,அதாவது 126,000 பேர் வெளியேறினர், இதே காலக்கட்டத்தில் 8000 பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்,இது மீதியுள்ள 8 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். மேலும் குவைத்தில் இருந்து வெளியேறிய அதிகபட்சமாக வெளிநாட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இந்தியர்களின் எண்ணிக்கையில் 6.57 சதவீதமாக சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 69,592 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இதையடுத்து குவைத்தில் வசிக்கின்ற மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையை 989,270 ஆக குறைந்துவிட்டது.