BREAKING NEWS
latest

Thursday, February 4, 2021

குவைத்தில் ஞாயிறு முதல் வெளிநாட்டினர் நுழைய தடை; இன்றைய முக்கிய அமைச்சரவை முடிவுகள் தமிழில் இங்கே அறியலாம்

குவைத்தில் ஞாயிறு முதல் வெளிநாட்டினர் நுழைய தடை; இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் முக்கிய முடிவுகளை விரிவாக தமிழில் இங்கே அறியலாம்

Image : செய்தித் தொடர்பாளர் தாரிக் அல்-முஸ்ரிம்

குவைத்தில் ஞாயிறு முதல் வெளிநாட்டினர் நுழைய தடை; இன்றைய முக்கிய அமைச்சரவை முடிவுகள் தமிழில் இங்கே அறியலாம்

குவைத்தில் இன்று(03/02/21) புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ராம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த முடிவுகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

தற்காலிகமாக விமான நிலையங்கள் முழுமையாக மூடும் முடிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி(07/02/21) ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டினர் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து குவைத் குடிமக்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும், வீட்டுப் பணியாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, உணவகங்கள் காலையில் 5 மணி நேரமும், மாலை 8 மணி நேரமும் மட்டுமே, இருப்பினும் இரவு 8 மணிக்குப் பிறகு டெலிவரி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வணிக வளாகங்களின் வேலை நேரம் மாலை 5 மணி வரையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு 1 மாதம் நடைமுறையில் இருக்கும்.

அரங்குகள் மற்றும் கூடாரங்களை வாடகைக்கு விடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோல் தேசியதின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள்,உணவகங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கேட்டரிங் கடைகள் உள்ளிட்டவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் கடன் திருப்பிச் செலுத்துதல் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் அடுத்த வாரம் முதல் அனைத்து வகையான கிளப்புகள், பெண்கள் அழகு நிலைகள் மற்றும் சலூன்களையும் மூடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் ஞாயற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டு வார தற்காலிக தடைக்கு பிறகு அதாவது,வருகின்ற பிப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டில் நுழையும் அனைவரும் ஒரு உள்ளூர் ஹோட்டலில் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலை(Institutional Quarantine) தங்கள் சொந்த செலவில் முடிக்க வேண்டும் எனவும்,இந்த முடிவு பிப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு நடைமுறைக்கு இருக்கும் எனவும் ,இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல் மீதியுள்ள 7 நாட்கள் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தையும் முடிக்க வேண்டும்.

Add your comments to குவைத்தில் ஞாயிறு முதல் வெளிநாட்டினர் நுழைய தடை; இன்றைய முக்கிய அமைச்சரவை முடிவுகள் தமிழில் இங்கே அறியலாம்

« PREV
NEXT »