குவைத் சுகாதாரத்துறை அமைச்சக கூற்றுப்படி பாதிக்கப்பட்ட நபர்களில் 61.1% கோவிட் நோயாளிகள் குடிமக்கள்;செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் சனத் தெரிவித்துள்ளார்
Image : அப்துல்லா அல் சனத்
குவைத் சுகாதாரத்துறை அமைச்சக கூற்றுப்படி பாதிக்கப்பட்ட நபர்களில் 61.1% கோவிட் நோயாளிகள் குடிமக்கள்
குவைத்தில் 61.1% கோவிட் நோயாளிகள் பூர்வீகவாசிகள்(குவைத் குடிமக்கள்) என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் சனத் தெரிவித்துள்ளார்.குவைத்தின் கோவிட் பாதிப்பு தொடர்பான தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அவர் வெளிப்படுத்தினார்.மேலும் தீவிர சிகிச்சையில் உள்ள நபர்களின் சராசரியாக விகிதம் 15 சதவீதம் என்று அவர் தெரிவித்தார். குவைத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்களில் 67.12 சதவீதம் பேர் 16 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றார். பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை டிசம்பரில் 3,000 மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 9,000 க்கும் மேல் அதிகரித்துள்ளது என்றும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.