BREAKING NEWS
latest

Monday, February 1, 2021

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி அதிகாலையில் குவைத் வந்தடைந்தது

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி அதிகாலையில் குவைத் வந்தடைந்தது;இந்த தகவலை வெளியுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் ட்வீட் செய்துள்ளார்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி அதிகாலையில் குவைத் வந்தடைந்தது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி இன்று(01/02/21) திங்கள்கிழமை குவைத் வந்தடைந்தது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த 200,000 டோஸ் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா என்ற மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முலம் முதல்கட்டமாக 100,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான விலைமதிப்பற்ற நட்பையும் வலுவான உறவையும் நாங்கள் மதிக்கிறோம் என்று, இந்தியாவின் தடுப்பூசி குவைத்தில் வந்தடைந்தது தொடர்பான தகவலை வெளியுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெயசங்கர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக குவைத்தின் மருந்து மற்றும் மூலிகை மருத்துவத்தின் பதிவு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை கூட்டு தொழில்நுட்பக் குழுவின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவின் தடுப்பூசிக்கு அமைச்சகம் அனுமதி வழங்கியது.தொடர்ந்து மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் உதவி துணை செயலாளர் டாக்டர்.அப்துல்லா-அல்-பத்ர் சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்தார்.

Add your comments to இந்தியாவின் கொரோனா தடுப்பூசி அதிகாலையில் குவைத் வந்தடைந்தது

« PREV
NEXT »