குவைத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது;குவைத் நேரத்தில் காலை 9:27 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் தெரியவந்துள்ளது
Image credit: Official Soure
குவைத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது
நாட்டின் தேசிய புவியியல் ஆய்வுமையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் இன்று(04/02/21) வியாழக்கிழமை காலை நாட்டின் தென்மேற்கே Al-Manaqeesh பகுதியில், ரிக்டர் அளவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்ற தகவல் தகவல் தெரிவித்துள்ளது.
குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநரும், குவைத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தின் மேற்பார்வையாளருமான அப்துல்லா அல்-ஆன்சி ஒரு செய்திக்குறிப்பில் கூறியதாவது குவைத் நேரத்தில் காலை 9:27 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், புவியியல் ஆய்வுமைய அறிக்கையின்படி Al-Manaqeesh பகுதியில் 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.