குவைத் விமான நிலையத்தின் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான வசதிகளை அமைச்சர் மதிப்பீடு செய்தார்;அனைத்து பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் பிப்ரவரி-7 முதல்
Image credit: குணா நியூஸ்
குவைத் விமான நிலையத்தின் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான வசதிகளை அமைச்சர் மதிப்பீடு செய்தார்
குவைத் விமான நிலையம் வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்ற அமைச்சரவை உத்தரவிட்டதைத் தொடர்ந்து குவைத் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்திய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வீட்டுவசதி மற்றும் சேவைத்துறை அமைச்சர் டாக்டர்.அப்துல்லா மராபி இன்று ஆய்வு செய்தார். பயணிகளின் பி.சி.ஆர் பரிசோதனை உறுதி செய்யும் பொறுப்பு விமான நிலையங்களுக்கு பதிலாக விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குவைத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்தெரிவித்தார்.மேலும் இந்த முடிவு சுகாதார அமைச்சக ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும்.
மேலும் அவர் கூறுகையில் நாட்டில் உள்ள பிற சேவை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தனியார் மருத்துவமனையின் ஆய்வகங்களுடன் இணைந்து பி.சி.ஆர் பரிசோதனைகளை விமான நிறுவனங்கள் உறுதி செய்யும். இவை அனைத்திலும் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னிலை வகிக்கும் என்று அவர் மேலும் கூறினார். கோவிட் வைரஸ் தடுப்பதில் சுகாதார அமைச்சக ஊழியர்களின் பணிகளை அவர் குறிப்பாகப் பாராட்டினார். பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சகம், குவைத் பொது நிர்வாகம், சுங்க மற்றும் விமான நிலைய ஊழியர்களையும் அவர் பாராட்டினார். அதே நேரத்தில், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சிவில் ஏவியேஷன் பரிந்துரைத்த அனைத்து சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு மராபி அறிவுறுத்தினார்.
மேலும் உள்ளூர் நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்டையில் விமானநிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் பிப்ரவரி-7 முதல் தொடங்கப்படும் எனவும், விமான நிலையத்தில் 6 பரிசோதனை நிலையம் செயல்படும் எனவும், இதில் முனையம்(T1) 3 ,முனையம்(T3,T4,T3) தலா ஒவ்வொரு பரிசோதனை நிலையமும் இயக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.