குவைத்தில் போலியான பி.சி.ஆர் சான்றிதழ்கள் விற்பனை செய்த இந்தியர் பலநாள் கண்காணிப்புக்கு பிறகு கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் போலியான பி.சி.ஆர் சான்றிதழ்கள் விற்பனை செய்த இந்தியர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை விற்ற இந்திய நபர் ஒருவரை குவைத் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் பொறிவைத்து பிடித்தனர் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 30 தினார்களுக்கு 70 போலி பி.சி.ஆர் சான்றிதழ்கள் இதுவரையில் இவர் விற்பனை செய்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.51-வயது இந்திய நபரை அஹ்மதி போலீசார் நேற்று மாலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள தனியார் ஆய்வகத்தில் வைத்து கைது செய்துள்ளனர், எனவும் இவர் அந்த ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்(Lab Technician) என்பது தெரியவந்துள்ளது. தீவிரமான விசாரணைக்கு பிறகு இது தொடர்பான தகவலை அதிகாரிகள் இன்று (12/02/21) மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள அறிக்கையில் இப்படி போலியான பி.சி.ஆர் சான்றிதழ்கள் வழங்கபடும் செய்தி குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த நிலையில் கடந்த 5 நாட்களாக கைதான நபரின் நடவடிக்கைகள் முழுமையாக கண்காணித்து பிறகு குற்றம் நிரூபணமான நிலையில் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டனர் எனவும், எந்தவிதமான கொரோனா பரிசோதனையும் செய்யாமல் நோய்தொற்று உள்ள பலருக்கும் இவர் பி.சி.ஆர் எதிர்மறை சான்றிதழ்களை வழங்கியுள்ளதும், இவர்கள் தற்போது நாட்டிற்க்கு வெளியே உள்ளனர் எனவும், இவர்கள் மீண்டும் குவைத் திரும்பினால் கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவரது மொபைல் போன் பரிசோதிக்கப்பட்டது எனவும்,அதில் அவரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற நபர்கள் மற்றும் தொடர்பில் இருந்த நபர்கள் பற்றிய அனைத்து ஆதாரமும் கைப்பற்றப்பட்டது எனவும் அவர் விளக்கியுள்ளார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் எனவும் செய்தியில் தெரியவந்துள்ளது.