BREAKING NEWS
latest

Wednesday, February 10, 2021

குவைத் உள்துறை அமை‌ச்சகம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையினை இணையதளத்தில் துவங்கியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையினை இணையதளத்தில் துவங்கியுள்ளது;இது தொடர்பான செய்தி மாலையில் வெளியாகியுள்ளது

Image credit: குவைத் உள்துறை

குவைத் உள்துறை அமைச்சகம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையினை இணையதளத்தில் துவங்கியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடகங்கப்பிரிவு இன்று மாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அலி சபா உத்தரவின் அடிப்படையில் இந்த புதிய வசதி நடைமுறையில் வந்துள்ளது என்றும், இதன் மூலம் சேவைகள் பெறும் நேரத்தை மிச்சப்படுத்தி அபராதம் செலுத்தும் முடியும் என்று தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அனைத்து துறையின் சேவைகளும் ஆன்லைன் வழியாக வழங்கும் நடவடிக்கையின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளமான www.moi.gov.kw மூலம் நிறுவனங்களுக்கு போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும்,உள்துறை அமைச்சகத்தின் மின்னணு சேவைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் Infogdis@moi.gov.kw என்ற இந்த மின்னஞ்சலில் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

Add your comments to குவைத் உள்துறை அமை‌ச்சகம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையினை இணையதளத்தில் துவங்கியுள்ளது

« PREV
NEXT »