குவைத்தில் நேற்று முதல் நடைமுறையில் உள்ள புதிய கட்டுப்பாடுகள் குழப்பமடையத் தேவை இல்லை தெளிவான விளக்கம்;அமைச்சரவை உத்தரவில் கூறப்பட்டுள்ள விபரங்கள் இங்கே அறியலாம்
Image : நேற்றைய அதிகாரிகள் சோதனை
குவைத்தில் நேற்று முதல் நடைமுறையில் உள்ள புதிய கட்டுப்பாடுகள் குழப்பமடையத் தேவை இல்லை தெளிவான விளக்கம்
குவைத்தில் நேற்று(07/02/21) இரவு 8 மணி முதல் வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். தவறான புரிதல் காரணமாக நேற்று இரவு 8 மணிக்கு முன்பு பல உணவகங்கள்(ரெஸ்டாரன்ட்) மூடப்பட்டன, மேலும் சில உணவகங்களில் மாலை 5 மணி முதல் அமர்ந்து சாப்பிடும் சேவையைத் தவிர்த்தனர்.அது எதுவுமே தேவையில்லை. அமைச்சரவை உத்தரவில் கூறப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:
சலூன்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் முழுமையாக மூடப்பட வேண்டும்(பகல் உட்பட)வணிக நிறுவனங்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம். உணவு பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் மருந்து விற்கும் நிறுவனங்களும் இரவில் வேலை செய்யலாம். ரெஸ்டாரன்ட்களில் இரவு 8 மணிக்குப் பிறகு உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் (டெலிவரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை) முக்கியமாக தேவைகளுக்கு வாகனங்களை எடுத்து வெளியே வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை(இரவு மற்றும் பகல்) பார்டிகள் மற்றும் கூட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஊரடங்கு உத்தரவு இல்லை, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரலாம்.வெளிநாட்டினர் பிப்ரவரி-7(நேற்று) ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு குவைத்துக்குள் நுழைவதற்கு முதல்கட்டமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இராஜந்திர அதாகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்(அரசு மற்றும் தனியார் துறை), வீட்டுப் பணியாளர்களுக்கும்(Article-20),குடிமக்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Add your comments to குவைத்தில் நேற்று முதல் நடைமுறையில் உள்ள புதிய கட்டுப்பாடுகள் குழப்பமடையத் தேவை இல்லை தெளிவான விளக்கம்