வளைகுடாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய நிபந்தனை நடைமுறைக்கு வந்தது;குழந்தைகள் உட்பட அனைவரும் பொருந்தும்
Image: Delhi Airport
வளைகுடாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய நிபந்தனை நடைமுறைக்கு வந்தது
இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விதித்த புதிய விதிமுறையின்படி வளைகுடா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு பயணிகளும் இந்திய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கும் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆகியுள்ளது. இன்று(23/02/21) செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:00 மணி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் வீடு திரும்பும் வெளிநாட்டவர்களுக்கு பி.சி.ஆர் எதிர்மறை சோதனை முடிவுகள் மற்றும் மூலக்கூறு சோதனைகள் இப்போது கட்டாயமாக இருக்கும். பி.சி.ஆர் சோதனைக் கட்டணத்துடன் கூடுதலாக, வெளிநாட்டவர் இந்திய விமான நிலையத்திற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் உள்ள மூலக்கூறு சோதனைக்கு பணம் செலுத்த வேண்டும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அதே நேரத்தில், பல வெளிநாட்டவர்கள் புதிய நிபந்தனைகள் காரணமாக தேவையற்ற தாயக பயணங்களை ஒத்திவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வழிகாட்டுதலின் படி, இந்தியாவுக்கு வரும் குழந்தைகள் உட்பட அனைத்து சர்வதேச பயணிகளும் ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். ஒரு குடும்பத்தின் மரணம் தொடர்பாக உடனடியாக வீடு திரும்புவோருக்கு மட்டுமே பி.சி.ஆர் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இப்படிப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பே ஏர் சுவிதா தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடைய இப்படி மரணம் தொடர்பான காரணத்தால் துபாய் விமான நிலையம் வந்த இந்திய பயணி ஒருவருக்கு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளன.இதற்காக கூறப்பட்ட காரணம் இறப்பு காரணமாக வருகின்ற பயணிகளை விமானத்தில் அனுமதிக்க இந்தய அரசு அறிவித்துள்ள ஏர் சுவிதா தளத்தில் Option இல்லை என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் நீங்கள் இந்தியாவில் எந்தவொரு விமான நிலையத்தில் இறங்கினாலும் வளைகுடாவில் இருந்து எடுத்து செல்லும் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கைவசம் இருந்தாலும். நீங்கள் தாயகத்தில் இறங்கும் விமான நிலையத்திலும் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இதற்காக கட்டண விபரங்கள் பின்வருமாறு:
Image : புதிய பி.சி.ஆர் பரிசோதனை கட்டண விவரம்