குவைத்தில் தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த தேவையில்லை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும்
Image : Kuwait Road
குவைத்தில் தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த தேவையில்லை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தற்போதைக்கு நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டாம் என்று குவைத் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தேசிய தின கொண்டாட்டங்களுக்கு முன் நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் என்ற சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அமைச்சரவை நிராகரித்தது. தற்போது நடைபெற்று வருகின்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு பதிலாக சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிப்பதை கடுமையாக்குவது அதை செயல்படுத்தவும்,மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களைத் தண்டிக்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று தினசரி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதை புதன்கிழமை(24/02/21) முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.உணவுகள் டெலிவரி செய்வது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் இந்த உத்தரவு வணிக வளாகங்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும்.