குவைத்திலிருந்து தாயகம் செல்லும் நபர் முன்கூட்டியே Quarantine-க்கு ஹோட்டல் முன்பதிவு செய்தால் மட்டுமே தாயகம் செல்ல முடியும்;பிரபல தினசரி நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது
குவைத்திலிருந்து தாயகம் செல்லும் நபர் முன்கூட்டியே Quarantine-க்கு ஹோட்டல் முன்பதிவு செய்தால் மட்டுமே தாயகம் செல்ல முடியும்
குவைத்தை விட்டு வெளியேறும் பயணிகள் நாட்டிற்கு மீண்டும் திரும்பும்போது நிறுவன தனிமைப்படுத்தலுக்கு முன்கூட்டியே ஹோட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிசிஏ செய்தித் தொடர்பாளர் சாத்-அல்-ஒடாய் தெரிவித்துள்ளார். புதிய முடிவு விசா ரத்து செய்து செல்லும்(Exit-யில்) வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது. புதிய உத்தரவு குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து வகையான Validity விசா வைத்திருப்பவர்களுக்கும், இரு வழி மற்றும் ஒரு வழி டிக்கெட்டுகளுடன் செல்லும் பயணிகள் அனைவருக்கும் பொருந்தும்.
மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒட்டாய் கூறுகையில் ஹோட்டல் முன்பதிவு கட்டாயமானது எனவும், ஆனால் பயணிகள் திரும்பும் தேதிக்கு ஏற்ப முன்பதிவை மாற்றியமைக்க முடியும், எனவே அவர்கள் திரும்பும் தேதி குறித்து உறுதியாக தெரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை என்றார், மேலும் இதற்காக குவைத்தின் மொசாஃபர் செயலி மூலம் ஏழு நாள் ஹோட்டல் முன்பதிவுகளை எளிதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக இந்த சேவையினை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சாத் அல்-ஒடாய் கூறினார். குவைத் வருகின்ற அனைத்து பயணிகளும் மொசாஃபர் தளத்தின் மூலம் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தல் செய்ய தங்கள் ஹோட்டலை முன்கூட்டியே முன்பதிவுகளைசெய்ய வேண்டும், இது உறுதி செய்து அந்தந்த விமான நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றார்.
இதற்காக மூன்று நட்சத்திர, நான்கு நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமே தற்போது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற முதல்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி- 21 முதல் வெளிநாட்டவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.இதற்கிடையில், வயதான பயணிகளுக்கான நிறுவனத்தின் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சாத் அல்-ஒடாய் கூறினார். இது என்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளது உள்ளிட்டவை தெளிவாக தெரியவில்லை. இந்த செய்தியை பிரபல தினசரி நாளிதழை மேற்கோள்காட்டி குவைத் தினசரி நாளிதழ்கள் பல செய்தி வெளியிட்டுள்ளது.