குவைத்தில் பிப்ரவரி-21 முதல் வருகின்ற அனைவருக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல்;இந்த நடைமுறை குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் அனைவருக்கும் பொருந்தும்
குவைத்தில் பிப்ரவரி-21 முதல் வருகின்ற அனைவருக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் முழு விபரங்கள்
பிப்ரவரி 21, 2021 முதல், குவைத் வருகை தரும் அனைவருக்கும் 3 முதல் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் செய்துக் கொள்ள அறைகள் கிடைக்கும் எனவும், அனைவருக்கும் ஹோட்டல்களில் 7 நாள்கள் நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) கட்டாயமாக இருக்கும். இதற்குப் பிறகு அவர்கள் 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தையும் கழிக்க வேண்டும். இந்த நடைமுறை குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் அனைவருக்கும் பொருந்தும். நாட்டில் வருவதற்கு முன்பு, பயணிகள் ஹோட்டலை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குவைத் அறிமுகம் செய்துள்ள முசாபர் செயலி பயன்பாட்டின் மூலம் ஹோட்டல் தங்குமிடத்தை முன்பதிவு செய்யலாம் எனவும்,நாட்டின் அனைத்து ஹோட்டல்களையும் இத்துடன் இணைக்க சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பயணிகள் கோவிட் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வது ஹோட்டல்களின் பொறுப்பாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தனிமைப்படுத்துதலில் உள்ள நபர்களுக்கு மூன்று நேரத்திற்கு உணவு அடைக்கப்பட்ட Box-களில் வழங்கபடும்.நிறுவன தனிமைப்படுத்தலுக்காக(Institutional Quarantine) வசூலிக்க வேண்டிய தொகையை அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த தொகையினை பயணிகள் செலுத்த வேண்டும். மேலும் குவைத் வருவதற்கு முன்பு தனிமைப்படுத்தல் ஹோட்டலை தேர்ந்தெடுக்கும் போது முன்கூட்டியே தொகையை செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தொகை திருப்பி வழங்கப்படமாட்டாது(Refund). இதற்கிடைய இந்திய உள்ளிட்ட 35 நாடுகளின் நேரடியாக பயண தடையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குவைத்துக்கு வருவதற்கு முன்பு மற்றொரு நாட்டில் தற்காலிக புகலிடமாக 14 நாட்கள் தங்கியிருந்து கோவிட்-19 எதிர்மறையான சான்றிதழ் பெற்று மட்டுமே நாட்டில் நுழைய முடியும்.