குவைத்தில் எந்தவிதமான கூட்டங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது;வாகனங்களில் தனியாக சென்றால் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை தெரிவித்தார்
Image: அப்துல் ஃபத்தா அல் அலி
குவைத்தில் எந்தவிதமான கூட்டங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது;வாகனங்களில் தனியாக சென்றால் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை
குவைத்தில் கடற்கரை, ஹோட்டல்கள், தனியார் வணிக ரிசார்ட்ஸ், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பொது பூங்காக்களில் எந்தவிதமான கூட்டங்களும் அனுமதி கிடையாது என்று லெப்டினன்ட் கேணல் அப்துல்-ஃபத்தா-அல்-அலி கூறினார். குடும்பத்துடன் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கு வருவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இதுபோன்ற விஷயங்கள் கவனிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முகமூடி இல்லாமல் பொது இடங்களில் பயணிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், ஒரு வாகனத்தில் தனியாக பயணம் செய்யும் போது முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்றார். பொதுமக்களிடம் இருந்து ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பு அதாகாரிகள் தன்னை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காக அவர் ஜஹ்ரா கவர்னரேட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யும் போது பத்திரிகையாளர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.