குவைத்தில் புதிதாக 362 விசாக்கள் வழங்கப்பட்டது;9,721 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது எனவும் மனிதவள ஆணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது
Image : செய்தித் தொடர்பாளர் அசிலா
குவைத்தில் புதிதாக 362 விசாக்கள் வழங்கப்பட்டது;9,721 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது
குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணைய செய்தித் தொடர்பாளர் அசிலா-அல்-மஸ்யாத் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி கடந்த 15 நாட்களில் 362 பணி அனுமதிகளை(New Work Permit)ஆணையம் வழங்கியதாகவும், கடந்த 27 நாட்களில் வெளிநாட்டினர்களின் 9,271 பணி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. நாட்டிற்கு வெளியே உள்ள தொழிலாளர்களின் பணி அனுமதி காலாவதியான நிலையில் 4999 பணி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது எனவும்,தொழிலாளி இறப்புகள் காரணமாக 555 பணி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது எனவும், தங்கள் பணி அனுமதி பத்திரங்களை ரத்து செய்து தாயகம் கிளம்பிய தொழிலாளர்களின் 3534 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 60 வயது கடந்த 183 பேர் குடும்ப விசாவினீ கீழ் தங்கள் விசாக்களை மாற்றி குவைத்தில் தொடர்ந்து தங்குவதற்கான நடைமுறைகளை முடித்தனர் என்ற தகவலையும் சம்பந்தப்பட்ட துறை வெளியிட்டுள்ளது.
மனிதவளத்திற்கான பொது ஆணையத்தால் புதிதாக அறிமுகம் செய்துள்ள நவீன மின்னணு அமைப்புகளின் சேவைகள் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 1,61,228 சேவைகள் ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டது எனவும், தொடர்ந்தது பணி அனுமதி(Work Permit) வழங்கல் சேவைகள் கடந்த ஜனவரி 24 முதல் துவங்கிய நிலையில், அந்த தேதியிலிருந்து நேற்று பிப்ரவரி- 7 வரையில் 362 பணி அனுமதிபத்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டது எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது புதிதாக பணி அனுமதி பத்திரங்களை வழங்குவது அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது என்பதும் புதிய நடைமுறை ஆகும். இங்கு பணி அனுமதி பத்திரங்கள என்று குறிப்பிடப்படுவது Work Permit ஆகும்.