சவுதியின் ரியாதில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது;இந்தியர் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி
Image : Riyadh Indian Embassy
சவுதியின் ரியாதில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கோவிட் பரவுவதைத் தவிர்ப்பதற்காகவும், எல்லா நேரங்களிலும் பொது இடங்களில் ஏற்ப்படும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், இந்திய தூதரக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை இன்று(14/02/21) வெளியிட்டுள்ளது.
Image credit: Riyadh Indian Embassy
அந்த அறிக்கையில் பிப்ரவரி- 7 தேதியிட்டு கீழ்க்கண்ட Um Al Hammam, Al Hada மற்றும் Al Khobar ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகத்தின் கிளை பாஸ்போர்ட் அலுவலகம் வருபவர்கள் கண்டிப்பாக முன் அனுமதி(Appointment) பெற்றிருக்க வேண்டும். இந்திய தூதரகம் சார்ந்த பல்வேறுபட்ட சேவைகள் மற்றும் பாஸ்போர்ட் சேவைகள் சம்பந்தமாக அலுவலகம் செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறுபட்ட இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கு நேரடியாக இந்த அலுவலகங்களுக்கு வரலாம் அல்லது கொரியர் மூலமோ பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.