சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது என்று நியூஸ் ஏஜென்சியால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image : சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது
சவுதியின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரும்,பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் அவர்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் குடல் அழற்சியை தொடர்பாக அவதிப்பட்டு வந்தார் எனவும்,அதை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. சவுதியின் ரியாத்தில் உள்ள கிங் பைசல் மருத்துவமனையில் புதன்கிழமை காலை இந்த அறுவை சிகிச்சை நடந்ததாக சவுதி நியூஸ் ஏஜென்சியால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(24/02/21) மாலையில் இளவசர் வீடு திரும்பினார். இதையடுத்து குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அவர்கள் இளவரசருக்கு உடல் நலக்குறைவில் இருந்து மீண்ட நிலையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மேலும் சிகிச்சை வெற்றிகரமாக முடித்த நிலையில் அதில் இருந்து பூர்ணாமாக விடுபட அமீர் வாழ்த்தியுள்ளார். இதுபோல் குவைத் கிரீடம் இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் மற்றும் பிரதமர் ஹிஸ் ஹைனஸ் ஷேக் சபா அல்-கலீத் ஆகியோரும் வாழ்த்து செயுதி அனுப்பினர் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.