சவுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது;உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Image : Saudi Police
சவுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது
சவுதி அரேபியாவில் கோவிட் வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சகம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதையடுத்து அடுத்த 20 நாட்களுக்கு உணவகங்களில் உட்கார்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை, இதுபோல் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் அனுமதி இல்லை,பொது நிகழ்வுகளும்(நிகழ்ச்சிகளுக்கு) தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சினிமா அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் மூடபட்டு இருக்க வேண்டும். முன்னதாக இந்த தடை உத்தரவுகள் அனைத்தும் 10 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றுடன் தடை விதிக்கப்பட்ட 10 நாட்கள் நிறைவடைகிறது. இந்நிலையில்,புதிய உத்தரவு இன்று(14/02/21) ஞாயிறுக்கிழமை வெளியாகியுள்ளது. புதிய உத்தரவு இன்று இரவு 10 முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை தெளிவுபடுத்தியுள்ளது.