குவைத்தில் நாளை முக்கியமான அமைச்சரவை கூட்டம் நடைபெறும்; ஊரடங்கும் பரிசீலிக்கப்படும் பிரபல தினசரி பத்திரிகைகள் இன்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது
Image : KuwaitCity
குவைத்தில் நாளை முக்கியமான அமைச்சரவை கூட்டம் நடைபெறும்; ஊரடங்கும் பரிசீலிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் வரும் நாட்களில் தேசிய தின விடுமுறை நாட்களை மக்கள் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல் குறித்து சுகாதரத்துறை அதிகாரிகளிடையே பெரும் கவலை உருவெடுத்து உள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. நாட்டில் அவசர பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் நாட்டின் தினசரி நோய்தொற்று அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு முன்பு ஒரு பகுதி பூட்டுதலையும்(ஊரடங்கு) விதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான நாளை(12/02/2) வியாழக்கிழமை சுகாதரத்துறை அதிகாரிகள் மற்றும் நிதித்துறை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும்.வரவிருக்கும் நாட்களில் நாட்டில் விதிக்கப்பட வேண்டிய கட்டுபாடுகள் மற்றும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் நீக்கப்பட வேண்டியவை உள்ளிட்ட தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக உள்துறை, சுகாதாரம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைகளுடன் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் அரசாங்க அதாகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள். இது தொடர்பான செய்தியை நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி குவைத்தின் பிரபல தினசரி பத்திரிகைகள் இன்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது.