குவைத்தில் இந்தியர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது;சந்தேகத்தின் பேரிலனா மரண வழக்காக பதிவு செய்துள்ளனர்
Image : மரணமடைந்த வினோத்
குவைத்தில் இந்தியர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் இந்திய கேரளா மாநிலம், எர்ணாகுளம்,துருதிசேரி பகுதியை சேர்ந்த வினோத்(வயது-37) இன்று(03/02/21) காலையில் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. Mangaf பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்த துயரமான சம்பவம் நடந்ததாக தெரிகிறது. உயிரிழந்த வினோத் அகமதிகுளோபல் இன்டர்நேஷனல் கம்பெனியில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்து வந்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலிசார் முதல்கட்டமாக சந்தேகத்தின் பேரிலனா மரண வழக்காக பதிவு செய்துள்ளனர். உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, இந்த மரணம் நடந்த குடியிருப்பை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை துவங்கவுள்ளது. உயிரிழந்த வினோதுக்கு ஜோதி என்ற மனைவியும்(KOC செவிலியராக வேலை செய்து வருகின்றார்) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.